Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அரசு பள்ளியில் மேசை உடைப்பு….. “+2 மாணவர்கள் 10 பேர் நீக்கம்”…. கலெக்டர் அதிரடி உத்தரவு..!!

வேலூர் தொரப்பாடி அரசு பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக 10 மாணவர்கள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.. இந்த பள்ளி கடந்த 23ஆம் தேதி ஒரு மணி நேரத்துக்கு முன்பாக விடப்பட்ட நிலையில், பள்ளி விடும் போது மாணவர்கள் வீட்டுக்கு செல்லாமல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் இருக்கக்கூடிய இரும்பு மேசைகளை உடைத்து அதை நாசம் செய்துள்ளனர்..

இது தொடர்பாக பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்துரைத்த போது, அதையும் பொருட்படுத்தாது அட்டகாசத்தில் ஈடுபட்டு உள்ளனர்.. இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.. அதன்பின் மாணவர்கள் அங்கிருந்து ஓடி உள்ளனர்.. இதற்கிடையே மாணவர்கள் மேசையை சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது..

இந்நிலையில் இன்று காலை இது தொடர்பாக தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலூர் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) பூங்கொடி வட்டாட்சியர் செந்தில்குமார்,மாவட்ட கல்வி அதிகாரி சம்பத் ஆகிய மூவர் கொண்ட குழு  விசாரணை மேற்கொண்டது.. முதல் கட்டமாக மாணவர்கள் உடைத்த மேசைகளை ஆய்வு செய்துவிட்டு சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து விசாரணை செய்தனர்..

இந்நிலையில் வேலூர் தொரப்பாடியில் பள்ளி மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக 10 மாணவர்கள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 10 மாணவர்களையும் மே 5ஆம் தேதி வரை தற்காலிகமாக பள்ளியில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக் கூடாது மீறி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.. ஆட்சியர் அலுவலக விசாரணையில் பெற்றோருடன் வந்த மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்..

 

Categories

Tech |