தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 1,01,757 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். சென்னை பிஎஸ்பிபி பள்ளி, சுஷில் ஹரி பள்ளி போன்ற பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரை அடுத்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.