Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் ஜனவரியில்…. கல்வியாளர்கள் அதிர்ச்சி தகவல்….!!!!

ஆசிரியர் தேர்வுக்கு அரசு கொண்டு வந்துள்ள வயது வரம்பில் அடுத்த வருடம் பல லட்சம் பட்டதாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறையில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அண்மையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதல் முறையாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அவை பொதுப் பிரிவினருக்கு 40 வயதும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 வயதும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த 40 வயதை கடந்த முதுகலை பட்டதாரிகள் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதுடன் முதல்வருக்கு மனு அளித்திருந்தனர்.

மேலும் இந்த அறிவிப்பு இந்த ஆண்டில் தேர்வு எழுதவிருக்கும் பட்டதாரிகளிடம் வரவேற்பை பெற்று இருந்தாலும், பிற்காலத்தில் பயன் தராது என்று பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி மக்கள் நீதி மையம் கட்சி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது, திமுக அரசு அரசாணை ஒன்றை வேண்டா வெறுப்பாக பிறப்பித்துள்ளது.

அதில் ஆசிரியர் நியமன வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40லிருந்து 45 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி 2021 வரை செல்லுபடியாகும். அதன் பின்னர் மீண்டும் வயதுவரம்பு 45 லிருந்து 42 ஆகவும் 50 லிருந்து 47 ஆகவும் 3 ஆண்டுகள் குறையும் என்று கூறியுள்ளது.

இதையடுத்து கல்வித் துறையில் இருப்பவர்கள் கூறும் போது இந்த அறிவிப்பானது 31 ஆம் தேதி டிசம்பர் மாதம் 2021 வரை செல்லுபடியாகும் என்பதால் தமிழகத்தின் 3 முதல் 5 லட்சம் பட்டதாரிகள் பாதிப பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கின்றனர். அதனால் உச்ச வயது வரம்பு 57 அல்லது 59 அதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |