ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்திற்கு பிறகு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். இது நடப்பு மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, புதுப்பணியிடங்கள் கோரவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளதால் ஆசிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆகையால் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை ஜூன் மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் முதன்மை மாவட்ட வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள கமிட்டியிடம் புகார் அளிக்க வேண்டும். உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் பள்ளியில் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பது, காப்பி அடிப்பது போன்ற செயல்கள் மிகுந்த வருந்தத்தக்க வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.