டியூஷன் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீடுகள் அல்லது சென்டர்களில் டியூஷன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த ராதா என்பவர் தனது பணி மாறுதலை எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளிகள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்ஸ் அப் குழு உருவாக்கி விளம்பரப்படுத்தப்படும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் டியூஷன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் குழுவை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அரசு அலுவலர்களுடன் ஒப்பிடும்போது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வேலை நாள் மற்றும் வேலை நேரம் மிகவும் குறைவானது.
இவ்வாறு இருக்க டியூசன் எடுப்பது ஆசிரியர் சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. இது பணம் சம்பாதிக்கும் பேராசையை அதிகரிக்கிறது என உயர்நீதிமன்ற கிளை கருத்துக்களை தெரிவித்து உள்ளது. அதனால் வீடுகள் அல்லது சென்டர்களில் டியூஷன் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.