Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்…. மாநில அரசு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு….!!

புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழகம், கேரளா, ஆந்திராவில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் தமிழகத்தில் வெளியாகியுள்ளன. இதேபோல் தமிழகத்தின் பாடத்திட்டங்களை பின்பற்றி வரும் புதுச்சேரியிலும் அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரியை பொருத்தவரை மாகி பிராந்தியம் கேரளா பாடத்திட்டத்தையும் ஏனாம் பிராந்தியம் ஆந்திர பாடத்திட்டத்தையும் கொண்டுள்ளது.

அதோடு கல்வி வாரிய பாடத்திட்டம் என வெவ்வேறு பாடத்திட்ட முறைகளை பின்பற்றி வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சிடெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |