Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. வேறு பெண்ணை நியமித்து பாடம் நடத்தியதால் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன் பட்டியில் இருக்கும் அரசு மேல்நிலை பள்ளியில் முரளிந்திரன் என்பவர் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் வெளியே சென்று விடுகிறார். அதற்கு பதில் தனக்கு தெரிந்த வேறு ஒரு பெண்ணை ஆசிரியராக நியமித்து முரளிந்திரன் பாடம் நடத்த சொல்வதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து அறிந்த மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முருகன் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்த போது முரளிதரன் பணியில் இல்லை.

அவருக்கு பதில் வேறு ஒரு பெண், மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு மேலாக அவர் பள்ளிக்கு வராமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக பெண் ஆசிரியரை நியமித்து பாடங்கள் எடுக்க சொல்லியதற்காகவும், பள்ளிக்கு வந்து விட்டு வெளியே சென்றதற்காகவும் முரளிந்திரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடியாக உத்தரவிட்டார்.

Categories

Tech |