Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 50 சவரன் நகை ரூ.4 லட்சம் கொள்ளை ….!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 50 சவரன் நகை மற்றும்  4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாலிஸ் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சென்னையில் இருக்கும் மகனை காண மனைவியுடன் கடந்த சனிக்கிழமை புறப்பட்ட அவர் வீட்டை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அண்ணன் மகன் ஜோசப் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டுயின்  கதவு உடைக்கப்பட்டுருந்த நிலையில் தகவல் அறிந்த போலீசார் நேரில் விரைந்தனர்.

வீட்டுயின் உரிமையாளர் சின்னப்பராஜும் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டார். வீட்டில் 50 சவரன் நகையும் 4 லட்சம் ரூபாய் பணமும் வைத்திருந்ததாக பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்துள்ளரர். எனவே அவற்றை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |