Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி கழிவறையில் துர்நாற்றம்…. பா.ம.க எம்எல்ஏ செய்த காரியம்…. நெகிழ்ச்சி….!!!!

தர்மபுரி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் நேற்று இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் சுகாதாரம் சீர்கேடாக இருப்பதை அவர் கண்டறிந்து, பின் சம்மந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் உடன் கழிவறை பகுதிக்கு சென்று ஆய்வுக்கு சென்றார். அங்கு சென்றபோது கழிவறைக்கு வெளியே துர்நாற்றம் வீசியது. இதனால் அவர் தன் உதவியாளரிடம் தெரிவித்து கழிவறையை தூய்மை செய்யும் பிரஸ், ப்ளீச்சிங், பவுடர், பினாயில் வாங்கி வரச்சொல்லி பள்ளி மேலாண்மை குழு தலைவர் உடன் கழிவறையை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் முன்னிலையில் சுத்தம் செய்தார்.

அதன்பின் அவர் பேசியதாவது, இதேப்போன்று தான் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏழை மாணவிகள் அரசு பள்ளியில் பயில்கின்றனர். அவர்களின் சுகாதாரத்தில் ஆசிரியர்கள் அக்கறை செலுத்த வேண்டும். கழிவறைக்கு பயன்படுத்தப்படும் பெனாயில் ஆகியவை இல்லை எனில், எனக்கு சொல்லுங்கள் நான் வாங்கி தருகிறேன். மேலும் தூய்மை பணியாளர்கள் பணிக்கு வரவில்லை எனில், என்னிடம் கூறுங்கள் நானே தூய்மையாக்கிவிட்டு செல்கிறேன். எனவே மாணவிகளுக்கு சுகாதாரம் ஆன கழிப்பறை கட்டாயமான ஒன்று என கூறினார்.

அதனை தொடர்ந்து பள்ளிகளிலுள்ள கட்டிடங்களை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிகளில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படாத கழிப்பறைகள் இருந்தது. அப்பகுதி முழுதும் கொசு அதிகமாக இருந்ததை கண்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தொடர்புகொண்டு பள்ளி முழுவதும் தூய்மையாக்க அறிவுறுத்தினார். இது தொடர்பாக பேசிய தர்மபுரி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன், பள்ளிகளிலுள்ள கழிப்பறைகள் அசுத்தமாக இருப்பதால் மாணவிகள் அதை பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது.

ஆகவே தூய்மை பணியாளர்களை முறையாக பணி அமர்த்தி கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க பள்ளி ஆசிரியருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். அத்துடன் பயன்படுத்தப்படாமல் உள்ள கழிப்பறைகளை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதியதாக அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை கட்டப்படும். அவற்றில் சானிடரி நாப்கின் சுகாதார முறையில் அப்புறப்படுத்தும். அதன்பின் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த சட்டப் பேரவையில் பேசியதாகவும், இது பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சரிடமும், முதலமைச்சரிடமும் நேரடியாக சென்று முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |