கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள நாகனூர் ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 150 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மதியம் சத்துணவுவில் வழங்கப்பட்ட முட்டைகள் கெட்டுப்போய் உள்ளது என்று பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் முட்டைகளை புழு வைத்து கெட்டுப்போனா வாட வருவதையும் கண்டறிந்தனர். இதையடுத்து கெட்டுப்போன முட்டைகளை குழந்தைகளுக்கு வழங்கியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற கெட்டுப்போன முட்டைகளை குழந்தைகளுக்கு வழங்கி வருவதால் பல்வேறு தொற்று நோய்கள் வர வாய்ப்புள்ளது. எனவே முட்டை வழங்கும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலாண்மை குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.