தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெல்லிநகர் பகுதியில் ராஜா(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் இருக்கும் மற்றொரு வீட்டை விலைக்கு வாங்கி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக சொந்த வேலை காரணமாக ராஜா வெளியூருக்கு சென்ற பிறகு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி ராஜா அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது ஒரு அறையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு இந்த போலீசார் அந்த நபர் யார்? வீட்டிற்குள் எப்படி வந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.