சென்னை பலவந்தாங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில பெண்கள் கழிவறையில் எட்டிப் பார்த்து செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் உள்ள கழிவறைக்கு மாணவிகள் சென்றபோது அப்போது அங்கு சிலர் மறைந்து கொண்டு வீடியோ எடுத்துள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு வட மாநில தொழிலாளர்களை பிடித்து போலீஸ் ஆர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்கள் கழிப்பறை பள்ளியின் ஒதுக்குப்புறத்தில் இருப்பதால் அருகில் பணியாற்றி வந்த வடமாநிலத்தவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.