அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து வைத்து ஆசிரியர்கள் அசத்திய நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் கீழநாலுமூலைகிணற்றில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் 100-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தநிலையில், மாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள் கறி விருந்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனை அடுத்து நேற்று முன்தினம் மதியம் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் நெய் சோற்றுடன் கறி விருந்து வைத்தார்கள். இதில் பங்கேற்ற மாணவர்கள் சந்தோஷமாக கறி விருந்து சாப்பிட்டு ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த விருந்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த வைக்கப்பட்டது. இதில் பள்ளி தலைமையாசிரியை இந்திராணி, பள்ளி ஆசிரியர்கள் ஜெயந்தி, பிரபாவதி, நியூஸ் ஹெப்சிபா, ஞானதீபம் எமி, தர்மராஜ் உட்பட ஊர் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கறிவிருந்து நிகழ்ச்சியை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.