Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டியுடன் பால் வழங்குவது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது பேசிய சங்ககிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ சுந்தரராஜன், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என்று அதிமுக அரசு தெரிவித்தது.

அதிமுக எம்எல்ஏ.வின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் தினமும் ஒரு டம்ளர் பால் குடித்தால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்கும். அதனால் விவசாயிகளும் பயன் பெறுவர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல்வருடன் ஆலோசனை செய்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |