Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல…. இப்ப தனியார் பள்ளி மாணவர்களுக்கும்”….. செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்ததாக உயர்கல்விக்கு கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி, இளநிலை பட்டப்படிப்பு, இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை உயர் கல்வியிலும் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டியது கட்டாயம். ஆனால் தற்போது அரசின் சார்பில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

Categories

Tech |