ஆளுநர் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் 75 -வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்வதாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இவர் பள்ளிகளின் தரம், சிறப்பு மற்றும் மாணவர்களின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறார். இவர் தற்போது 2 நாள் சுற்றுப்பயணமாக காரைக்காலுக்கு சென்றுள்ளார். இந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து தமிழிசை சௌந்தர்ராஜன் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடி அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே நிகழ்ச்சியின் நோக்கம் என கூறியுள்ளார்.
இதனையடுத்து அன்னை தெரசா பள்ளியில் படிக்கும் மாணவிகளின் வில்லுப்பாட்டு அற்புதமாக இருக்கிறது என்று கூறினார். மேலும் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும், தனியார் பள்ளிகளுக்கு ஏற்ப அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் எனவும் கூறினார். மேலும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும் என கவர்னரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக கூறிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் உறுதி அளித்துள்ளார்