12ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தக விமர்சனம் எழுதும் போட்டி வைக்கப்படும். இதில் வெற்றி ‘பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ என்ற திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் என்று 6-8, 9-10, 11-12 என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். அனைத்து மாணவர்களும் நூலகத்தில் உள்ள நூல்களில் வாரம் ஒன்று வழங்கப்பட வேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் படிக்கலாம்.
அதை வாசித்து முடித்த பிறகு மீண்டும் நூலகத்து திருப்பி கொடுத்துவிடலாம். படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம். அதை வைத்து ஓவியம் வரையலாம். நாடகம் செய்யலாம், கலந்துரையாடல் செய்யலாம். இவற்றில் சிறந்த படைப்புகளை தந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவில் போட்டி வைக்கப்படும். அதில் வெல்பவர்களுக்கு தலைச்சிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இதன்படி 6 முதல் பெறும் மாணவர்களுக்கு எழுத்தாளர்களுடன் உரையாடும் வாய்ப்பும், ‘அறிவுப் பயணம்’ என்ற பெயரில் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு சென்று உலக புகழ்பெற்ற நூலகங்கள், ஆவண காப்பகங்களை காணும் வாய்ப்பும் வழங்கப்படும் என கூறினார்.