மருத்துவ படிப்பிற்கு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் தமிழக அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுகிறது என்று கூறி மாணவர்களின் கல்விநிலை பாதுகாக்கும் நோக்கோடு கொண்டுவரப்பட்டது அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு. இந்த ஏழு சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்.
இந்நிலையில் மருத்துவக் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் 26 இடங்களில் 60 அரசு பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காத்திருப்பு பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மெரிட், ரேங்க் லிஸ்ட் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் ஹைகோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.