தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும் பேரிடர் காலங்களில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அவர்களின் நலனைக் கருதி பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவ படிப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இன்று மருத்துவத் துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக 2.5% இட ஒதுக்கீடு (மொத்தம் 10 சதவீதம்) வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.