Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மசோதா…. அதிமுக ஆதரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேருவது குறைந்து வருவதால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு விதிமுறைகளை பாதிக்காமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

வேளாண்மை,கால்நடை உட்பட்ட அனைத்து பாடப் பிரிவுகளிலும் கிராமப்புற மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொழில் படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அதிமுக வரவேற்கிறது. முதலமைச்சர் முன்மொழிந்த மசோதாவை அதிமுக முழுமனதுடன் ஆதரிக்கிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |