Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் போன்று “இவர்களுக்கும்”….. தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயில்வதற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அனைவருக்கும் தங்களுடைய கல்விக்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.  மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு காலை சிற்றுண்டி, உதவித் தொகை, உயர்கல்வி இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பால கிருஷ்ணன், “அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். இவை இரண்டிற்கும் இடையே உள்ள பாகுபாட்டை போக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |