Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்து…. அட்டகாசம் செய்த யானைகள்…. வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சிங்கோனா அரசு உயர்நிலை பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் தலைமை ஆசிரியரின் அறை கதவை உடைத்து பொருட்களை நாசப்படுத்தியது. இதனையடுத்து பள்ளி ஆய்வகத்தின் ஜன்னல் கதவுகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தது.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளை விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களின் உதவியுடன் வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். எனவே குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |