தேனியில் ஸ்கூட்டரில் வந்த தம்பதியர் பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். மேலும் இவரது மனைவி மகேஸ்வரியும் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் தங்களது மகளுக்கு திருமண அழைப்பிதழை கொடுக்க சென்றுள்ளார்கள். அப்போது இருவரும் முத்துதேவன்பட்டி பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும் போது இவர்களது மோட்டார் சைக்கிளுக்கு எதிராக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக இருவர் மீதும் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தம்பதிகள் கீழே விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள்.இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல் அரசு பஸ் ஓட்டுனர் தங்கபாண்டி மீதும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.