தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பொறுப்பேற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் பலர் கடும் அதிருப்பதி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 12) காலை பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக, கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அலுவலகத்திற்கு சென்று லியோனி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தில் என்னை பொறுப்பேற்க வைத்ததற்கு மிக்க நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2011ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற எனக்கு மீண்டும் கல்வி பணியாற்ற வாய்ப்பு அளித்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்துள்ளார்.