Categories
மாநில செய்திகள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்….. புதிய பாடத்திட்டங்கள்….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை விவாதத்திற்கு பிறகு அமைச்சர் க. பொன்முடி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆய்வகங்களை நவீன படுத்துவதற்காக பல்வேறு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனையடுத்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக அரசு கல்லூரிகளில் நூலகங்கள் மேம்படுத்தப்படும். இதற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அதன்பிறகு 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், தேசிய அளவிலான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கும் விதமாகவும் உள்ளரங்கத்துடன் கூடிய விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட இருக்கிறது.

இதற்காக ரூபாய் 80 கோடி நிதி ஒதுக்கப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆடை வடிவமைப்பு, வேளாண்மை பொறியியல், இயந்திர மின்னணுவியல், தளவாட தொழில்நுட்பம், ஆட்டோமொபைல்ஸ் பொறியியல் போன்ற புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும். மதுரையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் 18 வார புத்தாக்க பாடப்பிரிவு திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்காக முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும். 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படப்படிப்பு தொடங்கப்படும். புதுக்கோட்டையில் உள்ள மாமன்னர் கல்லூரியில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் கட்டப்படும். இதற்காக ரூபாய் 6 கோடி நிதி ஒதுக்கப்படும். மேலும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் கட்டணமின்றி சிறைக்  கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்றோர் படிப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார்.

Categories

Tech |