பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் இளைய சுகாதார ஆய்வாளர்களுக்கு காலமுறை ஊதியமும், பணியும் வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடைங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சுகாதார ஆய்வாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கியுள்ளார். மேலும் அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமார், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவேந்தன், சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட பொருளாளர் அப்துல் ரஜின், மாவட்ட தலைவர் அருள்பிரகாசம், பொருளாளர் பழனிவேல், தமிழ்நாடு சுகாதார அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மனோஜ் குமார் உள்பட பலரும் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.