Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

அரசு பேருந்தில் புகையிலை பொருட்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்கனல்லா சோதனைச் சாவடியில் மசினகுடி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊட்டிக்கு செல்லும் அரசு பேருந்தில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பந்தலூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் அப்சல் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கர்நாடகாவிலிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |