அரசு பேருந்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு ஜான்சன் (11) என்ற மகன் இருக்கிறார். இவர் எச்.ஏ.பி.பி தொழிற்சாலையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்து சிறுவன் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன் பிறகு சிறுவன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக சிறுவனின் மாமா நவல்பட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.