நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து உட்பட அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
டீசல் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணம் 17.17% உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மாநில போக்குவரத்து கழகம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் 50 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று போக்குவரத்து கழக இயக்குனர் தெரிவித்துள்ளார்.