Categories
தேசிய செய்திகள்

அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா….. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…!!!!!!!

தமிழகத்தில் மாநகரப் பேருந்துகளில் புதிய வசதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் மூலமாக 20,304 பேருந்துகள் 10, 417 வழித்தடங்கள் மூலமாக இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பொது போக்குவரத்தை சுமார் ஒரு கோடியே 7 லட்சம் பேர் பயன் படுத்தி வருகின்றனர். மேலும் பெண்களுக்கான இலவச போக்குவரத்து திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டிருந்த நிலையில் பெண்கள் பயணம் செய்யும் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 62 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நிர்பயா திட்டத்தின்கீழ் பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக 22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2,500 பேருந்துகளில் சிசிடிவி அவசர அழைப்பு பொத்தான்களை பொருத்த திட்டமிடப்பட்டு இருக்கின்றது.

மேலும் இதில் முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டிருக்கின்ற நிலையில் பேருந்துகளில் புதிய வசதிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் புதிய வசதிகள் இடம் பெற்றுள்ள பேருந்துகளில் 3 சிசிடிவி கேமராக்கள், 4 அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க், வீடியோ ரெக்கார்டர் போன்றவை பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த புதிய வசதிகள் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்த வித அச்சுறுத்தல் ஏற்படும் போது குற்றவாளி உடனடியாக கண்டுபிடிப்பதற்கும் குற்ற செயல்களை குறைப்பதற்காகவும் முக்கிய அங்கமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |