Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகள் தனியார் வசமா…? பொதுத்துறை நிறுவனம் தனியார் மயமாக்கப்படுகிறதா….? அமைச்சர் திடீர் விளக்கம்…!!!

அரசு பேருந்துகள் தனியார் வசமாகப்படுவதற்கு அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் அரசு பேருந்துகளின் தரம் உயர்த்தப்பட்டதோடு ஏசி வசதி மற்றும் தானியங்கி வசதி போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு பேருந்துகள்  ஏழை எளிய மக்கள் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தனியார் பேருந்துகளில் இருப்பது போன்று வசதிகள் அரசு பேருந்துகளில் இல்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியதால் அரசு பேருந்துகளிலும் ஏசி வசதி செய்யப்பட்டது. ஆனால் ஏசி வசதிகள் செய்யப்பட்ட பேருந்துகளை முறையாக பராமரிக்க அதிக செலவாகும்.

அதன் பிறகு தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிக அளவில் இருப்பதால் ஏசி பேருந்துகளை பராமரிப்பதில் அவர்களுக்கு சிக்கல் இருக்காது. இதன் காரணமாக அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அதோடு பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாகவும் அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது போக்குவரத்து கழகம் தமிழகத்திற்கு புதிதாக 2000 பேருந்துகளை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்ததால் காலதாமதம் காரணமாக பேருந்துகளை வாங்க முடியாமல் போனது. ஆனால் தற்போது வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக கூடிய  விரைவில் புதிய பேருந்துகள் வாங்கப்படும். எனவே போக்குவரத்து துறையை தனியார் வசம் ஒப்படைத்தல் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Categories

Tech |