Categories
தேசிய செய்திகள்

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…. நொடியில் பறிபோன உயிர்…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு….!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நேரியமங்கலம் எனும் இடத்தில் கேரள அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராத வகையில் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவற்றில் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் 58க்கும் அதிகமானோர் காயமடைந்து இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது, விபத்தில் சிக்கிய மற்றொரு நபரும் கவலைக் கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

விபத்துக்கான காரணத்தை நாங்கள் இதுவரை கண்டறியவில்லை. பேருந்து சுமார் 14-15 அடி மலைப் பகுதியில் விழுந்தது. மூணாறிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்தின் டயர் வெடித்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பேருந்து நடத்துனர் கூறியதாவது “விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் சிலர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பலத்த மழை பெய்துகொண்டிருந்ததால் ஜன்னல் ஷட்டர்கள் தாழ்வாக இருந்ததால், வெளியே உள்ளவற்றை அதிகம் பார்க்க முடியவில்லை. இதனால் எதிரே வந்த வாகனம் பேருந்து மீது மோதியதாக” அவர் கூறினார். தற்போது காயமடைந்த அனைவரும் எர்ணாகுளத்திலுள்ள களமசேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனிடையில் உயிரிழந்த நபர் சஞ்சீவன் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |