Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து டிரைவர் மீது தாக்குதல்…. போராட்டத்தில் ஈடுபட்ட சக ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகண்டறை நோக்கி அரசு பேருந்து பயணிகளுடன் மார்த்தாண்டத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை பத்மகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்றூர் மங்களா அருகே சென்ற போது எதிரே இன்னொரு அரசு பேருந்து வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இரண்டு பேருந்துகளுக்கும் நடுவே புகுந்து செல்ல முயன்ற போது நிலைதடுமாறி அவர் வைத்திருந்த பொருட்கள் கீழே விழுந்தது.

அப்போது பத்மகுமார் மோட்டார் சைக்கிள் வந்தவரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த நபர் சாலையோரம் கிடந்த மர கட்டையால் பத்மகுமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அறிந்த அரசு பேருந்து டிரைவர்களும், கண்டக்டர்களும் குலசேகரம்-மார்த்தாண்டம் சாலையில் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து கடமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் காயமடைந்த டிரைவரை விட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் கலைந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |