திருவாரூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து படிக்கட்டு உடைந்த விவகாரம் சார்பாக இரண்டு பேரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார் போக்குவரத்து கழக பொது மேலாளர்.
திருவாரூரில் இருந்து கங்காளஞ்சேரி, வைப்பூர், சோழங்கநல்லூர், நரிமணம் வழியாக நாகூர் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக இந்த பேருந்தில் நாகூரில் இருந்து திருவாரூர் சென்று கொண்டிருந்த பொழுது கங்காளஞ்சேரி ரயில்வே கேட் வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கிய போது வேகத்தடையில் உரசியதால் பஸ்சின் படிக்கட்டு முழுவதுமாக உடைந்து விழுந்ததனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழக இன்ஜினியர் அசோகன் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோரை நாகை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கின்றார்.