பள்ளி வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை பகுதியில் விமல்-ஸ்ரீ குட்டி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிளில் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. அப்போது ஒரு அரசு பேருந்து அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் சாலையில் விழுந்து கிடந்த தம்பதியினர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை வலதுபக்கமாக திருப்பியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தேவராஜ், ராதாகிருஷ்ணன் எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்தனர்.
இதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அரசு பேருந்து பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேனில் இருந்த அசோக் மற்றும் ஸ்ரீதேவி ஆகிய 2 வேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விபத்தில் சிக்கிய 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தக்கலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய 3 தொடர் விபத்துகளால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.