ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளோடு மைசூரில் இருந்து தமிழக அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திம்பம் மலைப்பாதையின் 6-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது.
அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சென்ற லாரியின் வலதுபுறம் பேருந்தின் மீது லேசாக மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.