Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. கண்டக்டர் உள்பட 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!!

அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள பாரி முனையில் இருந்து அரசு பேருந்து மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாத்தங்காடு பக்கிங்காம் கால்வாய் ரயில்வே தண்டவாளம் பகுதியில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பின்புற கண்ணாடி நொறுங்கி பேருந்து லேசாக சேதம் அடைந்தது.

மேலும் கண்டக்டர் ரவி, பேருந்தில் பயணம் செய்த தேன்மொழி ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |