Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய கிரேன்…. காயமடைந்த 6 பேர்…. கோர விபத்து…!!

ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் நோக்கி அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புதன் சந்தை சர்வீஸ் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் பேருந்து மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா, பானுமதி, ரகுவரன், பரமத்திவேலூரை சேர்ந்த சாமிகண்ணு, பிரபா, கிரேனில் வந்த உரிமையாளர் சுரேஷ்குமார் ஆகிய 6 பேரும் காயமடைந்தனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த ஆறு பேரையும் மீட்டு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |