Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் விபத்து…. 2 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள திருப்பதிசாரம் பூங்கா நகர் பகுதியில் பாஸ்கர்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரானிக் தராசு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய நண்பர் ஜான்சன் இவர் நாகர்கோவில் டபிள்யூ.சி.சி ரோட்டில் ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர் மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பாஸ்கர் கன்னியாகுமரியில் எலக்ட்ரானிக் தராசு பழுது நீக்கும் பணிக்காக மோட்டார் சைக்கிள் புறப்பட்டார். அப்போது அவருடன் ஜான்சனும் சென்றார்.

அதனை தொடர்ந்து அவர்கள் கொட்டாரம் அரசு மருத்துவமனைக்கு அருகில் வரும்போது எதிரே கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை நோக்கி அரசு பஸ் சென்றது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டும் மோதிக்கொண்டது. இதில் பாஸ்கர், ஜான்சன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு பாஸ்கர் ஜான்சன் ஆகிய இரண்டு பேரும் இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் அஜய் குமார்(42) என்பவர் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |