கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் கேரளா அரசு பேருந்து மளுக்கப்பாறை பகுதியில் இருந்து சாலக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை பேருந்தை வழிமறித்து துரத்தியதால் ஓட்டுநர் வாகனத்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். ஆனாலும் துரத்தி வந்த காட்டு யானை கோபத்தில் பேருந்தின் முன் பகுதியில் தந்ததால் குத்தியது.
இதனால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டதும் யானை அங்கிருந்து சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டு யானையின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர முயற்சி வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் சாலக்குடி வழியாக வால்பாறை பகுதிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டதால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.