Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை விரட்டி சென்ற காட்டு யானை…. சுதாரித்து கொண்ட ஓட்டுநர்…. வைரலாகும் வீடியோ…!!!

காட்டு யானை அரசு பேருந்தை விரட்டி சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரையில் இருந்து அச்சன்கோவிலுக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக செல்லும் சாலையில் வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இந்நிலையில் கேரள மாநில அரசு பேருந்து மேக்கரையிலிருந்து அச்சன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தது. சாலை ஓரமாக மெதுவாக கடந்து சென்றுவிடலாம் என நினைத்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார்.

அப்போது ஒரு யானை திடீரென பேருந்தை நோக்கி ஓடிவந்து பிளிறியதால் பயணிகள் அச்சத்தில் அலறி சத்தம் போட்டுள்ளனர். உடனடியாக சுதாரித்து கொண்ட ஓட்டுநர் யானை வருவதற்குள் பேருந்தை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். ஆனாலும் சிறிது தூரம் யானை பேருந்தை நோக்கி ஓடி வந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |