தமிழகத்தில் பைக் மற்றும் கார்களில் ஓட்டுநர் மது அருந்தி இருந்தால் உடன் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ஓட்டுனர் குடித்திருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராத விதிக்கப்படும். சவாரிக்காக பயணம் மேற்கொள்ளும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மதுபானங்களை விற்கிறதே தவிர மது அருந்து வாகனம் ஓட்டுமாறு கூறவில்லை என போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் விரைவில் தமிழகத்தில் அமலுக்கு வர உள்ளது. என் நிலையில் அது குறித்து பேசிய அவர், மது அருந்துபவர்கள் ஓலா,ஊபர் மற்றும் ஆட்டோவில் ஏறி செல்லலாமே தவிர வாகனங்களை ஓட்டிச் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.