பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடலை காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குனரான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் சினிமா ரசிகர்களை இத்தனை வருட காலமும் தன்னுடைய இனிமையான குரலால் தாலாட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது மீள தூக்கத்தில்அவர் ஆழ்ந்துவிட்டார்.விலை மதிப்பில்லாத இந்த இசைகலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்றுதான் அவருக்கு தரும் சரியான அங்கீகாரம் ஆகும்.
அந்த அறிவிப்பை செயல்படுத்திய முதலமைச்சருக்கு கலை உலகின் சார்பிலும் இசை உலகின் சார்பிலும் கோடி நன்றிகளை தெரிவிக்கிறேன். இந்த அறிவிப்பு பிரதமருக்கும் ,தமிழக முதலமைச்சரும் கலைத்துறை மீது எந்த அளவிற்கு அன்பும்,பாசமும் கொண்டுள்ளனர் என்பதை மொத்த உலகமும் அறிந்துகொள்வதற்கு இந்த அறிவிப்பு ஒரு எடுத்துக்காட்டாக அமைத்துள்ளது.