Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…. “ரூ 6.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி கார்”…. தொடங்கி வைத்த கலெக்டர்….!!!!

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரூ 6.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி கார் இயக்கத்தினை கலெக்டர் திவ்யதர்ஷினி ஆரம்பித்து வைத்தார்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புதிய பேட்டரி கார் இயக்கத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். டாக்டர் செந்தில்குமார் எம். பி., எஸ்.பி வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் முதல்வர் அமுதவல்லி, துணை முதல்வர் சாந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவகுமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் காந்தி உட்பட டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் புதிய பேட்டரி காரில் இயக்கத்தினை கலெக்டர் ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்து அந்த காரில் பயணம் செய்துள்ளார்.

இந்த பேட்டரி கார் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ 6.72 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியின் ஒருங்கிணைந்த அவசரகால தாய், சேய் சிகிச்சை மையம், ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்திலுள்ள மருத்துவர்களிடம் கலெக்டர் ஒப்படைத்துள்ளார். அப்போது கலெக்டர் கூறியதாவது, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இந்த புதிய பேட்டரி கார்களை நோயாளிகள் நல்ல முறையில் முறையாக பராமரித்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |