தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை எழும்பூரில் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர், விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை ஆகிய மருத்துவ கல்லூரிகளில் 150 மருத்துவ படிப்பு இடங்களுக்கு உடனே மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 100 மருத்துவ படிப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 1650 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அம்மா மினி கிளினிக் என்பது பெயரளவில் தான் இருந்தது, எந்த இடத்திலும் பயனளிக்கவில்லை என்று கூறினார்.