Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு புதிய கட்டுப்பாடு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கால்பந்தாட்ட வீராங்கனை  பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்தார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக மாநிலம் முழுவதும் தணிக்கை குழுக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் பொது அறுவகை சிகிச்சை துறை தலைவர்களுடன்  ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது. மாணவி பிரியா உயிரிழந்ததற்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் அந்த தகவல்  உண்மை இல்லை.இந்நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்றும்,  குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று  மருத்துவர்கள் கூறி இருந்தனர். மேலும் இது குறித்து போலீசார்  தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் வருகின்ற புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் அறுவகை  சிகிச்சைகள் குறித்த வழிகாட்டுதல்களும், வழிமுறைகளும் விவாதிக்கப்பட உள்ளது. அதன்பின்னர் அதற்கான அறிவுறுத்துதல்கள் அனைத்து மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |