தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அங்கு மூன்று வேளையும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உள்நோயாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்படும் சத்தான உணவோடு முட்டை மற்றும் பால் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவப்பணிகள் துறையினர் கூறுகையில், அரசு மருத்துவமனைகளில், சர்க்கரை, ரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ள நோயாளிகளுக்கு தனியாக பிரத்யேகமான உணவு வழங்கப்படுகிறது. சில மருத்துவமனைகளில், காய்ச்சல் நோயாளிகள் மற்றும் 1 முதல், 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கஞ்சியும் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவுப்படி, 450 மி.லி., பால் மற்றும் ஒரு முட்டையும் சேர்த்து வழங்கப்படுகிறது