Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசு மருத்துவமனைக்குச் சென்றால் நரகத்தை பார்க்கலாம்”… சர்ச்சையை ஏற்படுத்திய கமல்ஹாசன்…!!!

அரசு மருத்துவமனைக்குச் சென்றால் நரகத்தை பார்க்கலாம் என கமல் கூறியுள்ளதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரசு மருத்துவமனைக்கு சென்றால் நரகத்தை பார்க்கலாம் என பேசியுள்ளார். இதற்கு அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு சமயத்தில் அரசு மருத்துவமனை ஆற்றிய பணி பற்றி கமல் அறியவில்லை. அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் தான் அதன் தரம் தெரியும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |