அரசு மருத்துவமனைக்கு சென்றால் நரகத்தை பார்க்கலாம் என கமலஹாசன் தனது பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். எப்படியாவது இந்த ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பலரும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அரசு மருத்துவமனைக்கு சென்றால் நரகத்தை பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தார் இதற்கு மருத்துவர்கள் செவிலியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டதாகவும், மக்களுக்கு அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை வர தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.