Categories
தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் கட்டாயப் பணி திட்டம் ரத்து?….. மத்திய அரசின் அதிரடி முடிவு…..!!!!!!

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய படிப்பு முடிந்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தாங்கள் படிக்கும் மருத்துவமனையில் வேலை பார்க்க வேண்டும். இதற்கான ஒப்பந்தம் செய்யப்படும் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்க முடியாத மருத்துவர்கள் குறிப்பிட்ட அபராத தொகையை மாநிலத்தில் செலுத்த வேண்டும். இந்த ஒப்பந்த கொள்கை செல்லுபடியாகும் என கடந்த 2019-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு இது தொடர்பான விரிவான கொள்கையை ஆராய்வதற்காக மருத்துவர் பி.டி. அதானி தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழு கடந்த 2020-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் ஆய்வுக்காக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த வருடம் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் பணியாற்றும் முறையை ரத்து செய்யலாம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு ஆனது ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் பணி செய்யும் முறையை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற முடியாத மருத்துவர்களை கிராமப்புறத்தில் பணியாற்ற வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனவும் பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது.

Categories

Tech |